Filed under: Melody

யாரை நம்பி நான் பிறந்தேன்.. Video

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க 
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 

குளத்திலே தண்ணியில்லே கொக்கும் இல்லே மீனும் இல்லே
பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே 

தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு 
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா 
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா 
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே 

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக 
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ 
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் 
தேடி வரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும் 

I liked these two lines the most: "பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா 
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே"

படம் : எங்க ஊரு ராஜா

Song : Yaarai Nambi Naan Porathaen Video

(download)