Filed under: Kothu Parotta

Kothu Parotta Receipe

முன்குறிப்பு : நேற்று நான் செய்த கொத்து பரோட்டாவின் செய்முறை. எனக்கு சொல்லிக்கொடுத்த நண்பன் சுப்புவிற்கு நன்றி.

கொத்து பரோட்டா செய்முறை

Kothu_parotta

தேவையானவை:

பரோட்டா - 4

பெரிய வெங்காயம் - 1

பெரிய தக்காளி - 1

குடை மிளகாய் (பச்சை) - 1

கேரட் - 2 (அல்லது 12 பேபி கேரட்)

இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்

சிகப்பு மிளகாய் பொடி - தேவையான அளவு (1 டீ ஸ்பூன்)

உப்பு - தேவையான அளவு

ஆலிவ் ஆயில் / வெஜிடபிள் ஆயில் - தேவையன அளவு (2 மேஜைக்கரண்டி)

கடுகு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

கரம் மசாலா (MDH அல்லது உங்களுக்கு கிடைக்கும் பிராண்ட்)

கரிப் பொடி (தனியா,ஜீரா பொடி)

முட்டை - 2 (பிடிக்காதுனா வேணாம்)

கொத்தமல்லி - தேவையான அளவு

முன்னேற்பாடு :

வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.

கேரட்டை தோல்சீவி, ஒரு இஞ்ச் நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கி வேக வைக்கவும்.

Frozen பரோட்டா என்றால் அதையும் தோசைக்கல்லில் காயவைத்து, பிறகு அதை சின்ன சின்ன துண்டாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் பிளக்கவும். (மிளகாய் பிரியர்கள் பொடியாகவோ, நீளமாகவோ வெட்டிக்கொள்ளலாம்)

கொத்தமல்லியில் தண்டு இல்லாமல் மல்லியை தனியாக எடுக்கவும்.

செய்முறை :

குழிவான வாணலியில் எண்ணையை காயவைத்து கடுகை தாளிக்கவும்.

கடுகு வெடித்ததும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்நிறமானதும் அதில் இஞ்சி - பூண்டு பேஸ்டை போட்டு கிளரவும்.

பிறகு பச்சை மிளகாய், தக்காளி, குடை மிளகாய் மற்றும் வேகவைத்த கேரட்டை போட்டு வதக்கவும்.

உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளரவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும், முட்டை சேர்க்கவும். (பிடிக்காதவர்கள் விட்டுவிடலாம்)

பிறகு கரம் மசாலா, கரிப்பொடி போட்டு கிளரவும்.

(தேவையானல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம்)

துண்டாக நறுக்கிய பரோட்டாவை போட்டு 2, 3 நிமிடம் கிளரவும். 

(பரோட்டா ஒன்றுக்கொண்டு ஒட்டியிருந்தால், ஓட்டலில் கொத்துவது போல் கொஞ்சம் கொத்தலாம்.)

பரோட்டா, காய்கறிகளுடன் நன்றாக கலந்ததும், கொஞ்சம் கொத்தமல்லியை தூவி அடுப்பை அனைத்துவிடவும்.

பின்குறிப்பு :

சால்னா செய்ய நேரமில்லையென்றால் கொத்து பரோட்டாவை ரைத்தாவோடு சேர்த்து சாப்பிடலாம்.