Filed under: chennaitweetup

கடற்கரையில் தமிழ் டிவிட்டர்கள் - பதிவு #Tamiltweetup

(கடற்கரை சந்திப்பில் நடந்ததை டிவிட்டர் ஸ்டைலில் எழுத முயற்சித்துள்ளேன்.. விடுபட்ட விஷயங்களை பின்னூட்டத்தில் எழுதவும்.)

Dsc_0020

வந்திருந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

வருவேன் என்று சொல்லி ஏமாற்றிய @elavasam மற்றும் போன் செய்தும் எடுக்காத @writerpara பேச்சு கா.

டிவிட்டரில் என் புலம்பலை படித்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்த @vickytamil / @icarusprakash க்கு ஸ்பெஷல் ஷொட்டு.

முதல் ஆளாக 3:45க்கு காந்தி சிலை அருகே நின்று கொண்டு கடற்கரை அழகை பார்த்துக்கொண்டிருந்தார் @vickytamil (சத்தியமா வேற கலரை அவர் பார்க்கவில்லை)

மெரினா சீரமைப்புக்கு பிறகு மிக மிக அழகாக இருக்கிறது. இந்த ஆட்சியின் மற்றொரு சாதனை.

4:05க்கு வந்த @luckykrishna என்னது காந்தி சிலை 1959ல் நிறுவப்பட்டதா.. கலைஞர் இதுக்கு பொன்விழா எடுத்திருக்கலாமே என்று நிஜமாக வருதப்பட்டார். 
    அடுத்த புதிய தலைமுறையில் இதைப்பற்றி எழுதுவார் என்று நினைக்கிறேன்.

மற்றவர்கள் வரும் வரை விக்கி, லக்கியுடன் பரஸ்பர குசல விசாரிப்புகள் தொடர்ந்தன.

@ivansivan எப்படி இருக்கார், ஏன் வார்த்தை இதழ் வெளிவருதில்லை என்று @luckyonline விசாரித்தார்.

தமிழோவியம் இணைய இதழ் நடத்துவது பற்றிய என் அனுபவங்களை கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்தில் தம்பதி சமேதராய் வந்தார் வருங்கால இயக்குனர் தென்றல் ‘அவர்’ @isr_selva.

@lavanynaj, @athisha, @ommachi (தங்கமணி, சிகாமணியுடன்) வந்து ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

@isr_selva மனைவி என்னிடம் நீங்க தமிழ் நல்லா லோக்கலா பேசறீங்களே..என்று ஆச்சரியப்பட்டார். 
    நாங்க njவிலும் இதே வேலையாத்தான் அலையறோம் என்று சொன்னேன்.

அனைவரும் உட்கார்ந்து பேசலாமே என்று பீச் மணலில் ரவுண்ட் கட்டி உட்கார்ந்தோம்.

ஜோசியம் பார்க்கும் அம்மா ஒருவர் வந்து @lavanyaj, @isr_selva, எனக்கும் குறி சொல்லித்தான் ஆவேன் என்று படுத்த @vickytamil அவரை அனுப்பிவைத்தார்.

@vickytamil அது என்னங்க உங்க ஆளுங்க நைட் வந்து டிவிட்டரில் அடிக்கிற கூத்து தாங்க முடியலை, அதுவும் @dynobuoy வந்தா போச்சு.

@lavanyaj, @luckyonline னிடம் உங்களுக்கு ஏன் சாருவை பிடிக்கும் என்று கேள்வி கேட்க, அதற்கு
      பீமாவில் விக்ரமுக்கு, பிரகாஷ்ராஜை ஒரு idol ஆக பிடித்தது போல எனக்கும் சின்ன வயதிலிருந்து சாருவை பிடிக்கும் என்று சொன்னார்.

@athisha கடிகாரத்தை பார்த்தபடி 5 மணிக்கு, கிழக்கு அலுவலகத்தில் உலக சினிமா பத்தி பேசறாங்க போகனும் என்று @luckyonlineஐ அவசரப்படுத்தினார்.

@lavaynaj காம்கேஸ்ட் என்ன மாதிரி கம்பெனி என கேட்க, பதில் சொல்வதற்குள் @athisha குறுக்கிட்டு பேச்சை திசைதிருப்பிவிட்டார்.

@athisha போட்டிருந்த பிங்க் சொக்காயை பார்த்ததும், எனக்கு @dynobuoy நினைவு வந்தது.

@lavanyaj, @dynobuoy யாரு? என்று 2 முறை கேட்டார். அந்த பிஞ்ச மூஞ்சியை பத்தி சொன்னா ஊருக்கு ஒழுங்கா போய் சேர முடியாது என்று நழுவினேன்.

@vickytamil உடனே வேணாம் சொல்லாதீங்க, ஆள் தெரிஞ்சா அப்புறம் சுவாரஸ்யம் போயிடும் என்று உதவிக்கு வந்தார்.

இது போன்ற கூட்டங்களில் @idlyvadai யாரென்று கேள்வியை ஒருவர் கேட்பார், அதற்கு @penathal, @anbudanbala என்று ஒருவர் பதில் சொல்வார்.
    ஆனால் இதில் @writerpayon யாரு ? ஜெ.மோவா இல்லை.. பாராவா என்ற பேச்சு வந்தது. பலர் பாரா என்று சத்தியம் செய்தனர்.

சிறிது நேரம் @spinesurgeon எப்படி அசராமல் டிவிட் செய்வார் என்று அவர் தலையை உருட்டிக்கொண்டிருந்தோம்.

மற்றவர்களை காணுமே என்று @vickytamil மீண்டும் காந்தி சிலை அருகே சென்று பெரிய பட்டாளத்தை கூட்டி வந்தார்.

@anbudan_BALA @madhankarky @rgokul @rajeshpadman @donion @spinesurgeon @icarusprakash வந்தார்கள்.

@spinesurgeon நிஜத்துக்கும் நிழலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார். அவருடைய நோக்கியா போனில் எளிமையாக தமிழ் தட்டச்சு செய்ய வருகிறது.

@icarusprakash அந்த நோக்கியா மாடல் பேரை மூன்று முறை கேட்டு, தவறாக குறித்துக்கொண்டார்.

@rgokul, @rajeshpadman இருவரும் சேர்ந்து ஏதோ குட்டி தொழில் செய்வதாக சொன்னார்கள்.
    சரியாக விசாரித்ததில் ERP consultants என்று தெரிய வந்தது.
     @lavanyaj HR மேனேஜராக இருப்பதால் அவர் கம்பெனியில் வேலை இருக்கா என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

@rgokul அந்த கால அசோகன் போல பள பளவென தலையுடன் வந்திருந்தார். சலூன் செலவு மிச்சம்.

@anbudan_bala பார்ப்பதற்கு மனோபாலா போல் இருப்பதாக @isr_selva சொன்னார். என் பங்குக்கு நானும் விவேக் ஜோக்குடன் அதை ஆமோதித்தேன்.

எனக்கும்  @anbudan_balaக்கும் இருந்த விவேக் பஞ்சாயத்தை மறந்துவிடலாம் என்று இருவரும் முடிவு செய்தோம்.

@madhankarky வந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். (இரண்டு ரவுண்ட் வந்தது)
     அண்ணா பல்கலைகழகத்தில் பகுதி நேர பேராசிரியர், ipatti.காம் என்று தன்னைப் பற்றி நிறைய சொன்னார்.
     ஆனால் எந்திரன் பட வசனகர்தா என்பதுதான் பளிச்சென்று மனதில் நின்றது. :)

@isr_selva ’அவர்’ பட பாடல்களை அனைவருக்கும் கொடுத்து கேட்கச சொன்னார். mp3 உருவலாம் என்று நிறைய முயற்சி செய்தும் முடியவில்லை.
      ஒன்பது பாடல்கள், நான் கேட்ட வானவில் பாடல் பிடித்திருந்தது.
       @donion ஒரு பாடல் திருவாசகம் ரீமேக்கா என்று கேட்டு @isr_selva வை நெளிய வைத்தார்.

@icarusprakash ஆங்கிலத்தில் படித்தால்தான் நோபல் பரிசு பெற முடியுமா என @ommachiயை கேட்டு விவாதத்தை தொடங்கினார்.

@anbudan_bala ஆங்கிலம் படிக்க வேணும் என சொல்ல, @donion தேவையில்லை ஜப்பானியர்கள், ஜெர்மேனியர்கள் உதாரணம் காட்டினார்.
பேச்சு அப்படி இப்படி சுற்றி முடிவில் ‘அவர்’ திரைப்பட பாடல் mp3ல் வந்து நின்றது.

@isr_selva விடமே ‘அவர்’ திரைப்படம் டாரண்டில் கிடைத்தால் மட்டுமே பார்ப்பேன் என்று @donion வம்பு செய்தார்.

@doன்ion விஜயின் தீவிர ரசிகராம், காதலுக்கு மரியாதை அவர் பார்த்த சமீபத்திய படமாம்.

@madhankarky, @spinesurgeon தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வருவது பற்றி நிறைய பேசினார்கள். 
@donion, @ommachi அதை ஆமோதித்தார்கள்.
      எனக்கென்னவோ இருக்கும் எழுத்துக்களை தப்பில்லாமல் எழுத பழக வேண்டும் என்று தோன்றியது.

@anbudan_bala இளையராஜாவுக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது சரியா என @spinesurgeonஐ வம்புக்கு இழுக்க
    அது ரொம்ப சரி என @spinesurgeon அன்பாய் நழுவினார்.

6 மணிக்கு இருட்ட தொடங்கியும், @isr_selva கருப்பு கண்ணாடியை பாண்டியராஜன் போல் கழட்டாமல் இருந்தார்.
    தங்கமணி சொன்னால்தான் கழட்டுவேன் என்று அடம் பிடித்தார். தங்கமணியும் சொன்னார் அவரும் கேட்டார்.

ல‌ஷ்மி, ஜெயந்தி, @lavanyaj மூவரும் அவர்களுக்குள்ளே ஏதோ பேசி சிரித்துக்கொண்டார்கள். @ommachi மகள் அழகாய் பட்டம் விட்டாள்.

எப்பவுமே அடித்து ஆடும் @spinesurgeon மௌனமாக இருந்தார்.

பல முறை சுண்டல் பட்டானி அருகில் வந்தும், இரண்டு ரவுண்ட் ஸ்வீட் தவிர ஒன்றுமே சாப்பிடவில்லை.

சுமார் 6:40 வீட்டுக்கு கிளம்ப தயாரானோம். நான் நுங்கம்பாக்கம் செல்ல வேண்டும் என சொல்ல @madhankarky அழைத்து போவதாய் சொன்னார்.
உடனே @spinesurgeon தானும் வந்து வழியில் இறங்கிக்கொள்வதாய் சொன்னார்.
ஒரு பைக்கில் மூவர் எப்படி என்று நான் யோசிப்பதை பார்த்து, காரில்தான் போகிறோம் கவலை வேண்டாம் என்றார்.

புகைப்பட கேலரி.. இங்கே