Filed under: Adithya

என்னைப் போல் ஒருவன்

என்னைப் போல் ஒருவன்

ஒரு முறை கூட விளையாடியதில்லை என்றாலும் புத்திரசிகாமணி ஆதித்யாவிற்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். கடந்த ஒன்னரை மாதமாக என்னுடன் காலையிலும், மாலையிலும் (ஹைலைட்ஸ்) மேட்சுகளை பார்த்து வருகிறான். பவுண்டரி, அவுட், ரன், கேட்ச் போன்ற சில விதிகள் மட்டுமே தெரியும், மீதம் அவன் யூகமே.

தென் ஆப்ரிக்கா - நியுசிலாந்த் ஆட்டம் பார்த்துக்கொண்டிருக்கும் போது.. எனக்கும் அவனுக்கும் நடந்த உரையாடல்

டாடி நீ கிரிக்கெட் விளையாடியிருக்கியா ?

ம்ம்..ம்.. இந்தியாவுல சின்ன பையனா இருக்கும் போது.

ஓ.. நீ சச்சின் கூட விளையாடியிருக்கியா ?

இல்லே.. என் ப்ரெண்ட்ஸோட விளையாடியிருக்கேன்.

நீ டிவியில வந்திருக்கியாபா ?

இல்லேடா கண்ணு..

இப்போ டிவியில விளையாடுவியா ?

அப்பாவுக்கு வயசாயிடுச்சு.. சேர்த்துக்கமாட்டாங்க.. நீ கிரிக்கெட் விளையாடறியா ?

ஓ.. I love Cricket, இப்படி பால் போட்டு அப்படி பேட்டால அடிப்பேன். (சைகை)

சரி உனக்கு பேட், பால் வாங்கி தர்றேன், ப்ரெண்ட்ஸ் கூட விளையாடு.

எனக்கு தெரியாதே..

அப்பா சொல்லி தர்றேன்

thankyou daddy

சரி உனக்கு பேட்டிங் பிடிக்குமா, பவுலிங் பிடிக்குமா ?

(மௌனம்)

இல்லே உனக்கு தோனி மாதிரி விக்கெட் கீப்பிங் பிடிக்குமா ?

(மௌனம்)

என்னடா யோசிக்கறே ?

எனக்கு ரெட் ஷர்ட் போட்ட அங்கிள் மாதிரி விளையாட பிடிக்கும்.

அது அம்பையர்டா.. வயசானதும் நீ அம்பையர் ஆகலாம்.. சின்ன பையனா நீ விளையாடனும்..

இல்லை டாடி, அம்பையர் ஆகறேன் அப்போதான் அடி படாது, இல்லாட்டி அடிபட்டு Blood வரும்.

நீ carefulஆ விளையாடினா அடி படாது..

இல்லை டாடி, அம்பையர்தான். அப்போதான் எல்லாரும் என்கிட்ட பயப்படுவாங்க. நான் அவுட் சொன்னா அவுட், கைய ஆட்டினா ஃபோர்.

டேய், நீ சச்சின், தோனி மாதிரி விளையாடினா எல்லாரும் உன்னை பார்க்க ஆசைப்படுவாங்க.. அம்பையர் ஆனா யாரும் பார்க்கமாட்டாங்க.

அப்போ நான் கிரிக்கெட்டே ஆடலை.. சினிமாவுல நடிக்கறேன்.

என்னது சினிமாவுலயா ?

ஆமாம்..

சரி தமிழ் சினிமாவா, இங்கிலீஷ் சினிமாவா ?

தமிழ் சினிமா.

சரி யாரை மாதிரி நடிக்கப்போறே ?

ரஜினியா, கமலா, சூர்யாவா, விஜய்யா, விக்ரமா இல்லை வடிவேலுவா ?

(மௌனம்...)

யாரு மாதிரி ?

இரு டாடி யோசிக்கறேன்..

ஹூம்ம்..

டாடி நான் விஜய் மாதிரி நடிக்கப் போறேன்

என்னது ? ஏன் ?

விஜய்க்குதான் அடியேபடாது.. எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டே இருப்பாரு.

உன்னைய மாதிரி ஒரு முழுச்சோம்பேறிய நான் பார்த்ததில்லை.. சரி சரி போய் டாடிக்கு தண்ணி கொண்டு வா.